சித்தர் கூடம் அறக்கட்டளை சார்பில் மாணவிகளுக்கான விளையாட்டுப்போட்டி

சித்தர் கூடம் அறக்கட்டளை சார்பில் மாணவிகளுக்கான விளையாட்டுப்போட்டி
X

மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடியில் செயல்பட்டு சித்தர்கூடம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு

குழந்தைகள் மாணவிகள் வளர்ச்சிக்காக சித்தர் கூடம் அறக்கட்டளை சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகின்றனர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடியில் செயல்பட்டு சித்தர்கூடம் அறக்கட்டளை சார்பில் நம் குழந்தைகள் இல்லம் மாணவ மாணவியர்களுக்கு பாரம்பரிய கலைகளான பரதம், வீரவிளையாட்டான சிலம்பம் மற்றும் கைவேலைப்பாடுகளான தையல் பயிற்சி, கணிணி பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.

நம் குழந்தைகள் இல்ல மாணவ மாணவியர்கள் மட்டும் அல்லாது கள்ளிக்குடி கிராம சுற்றுப்புற கிராம மகளிர்களுக்கும் இப்பயிற்சி சித்தர்கூடம் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டு வருகின்றது. நேற்றைய தினம் மதுரையில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் சித்தர்கூடம் நம் குழந்தைகள் இல்ல மாணவ மாணவியர்கள் கலந்துக் கொண்டு பரிசுகளை வென்றனர்.

Tags

Next Story