திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஸ்ரீ அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்திற்கு தாலி செய்து எடுத்துச் சென்ற புகலிடமான சிறப்புப்பெற்றது திருமங்கலம் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில். இக்கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 வலம்புரி சங்கு அமைத்து அதற்கு சிறப்பு பூஜை செய்து சிவபெருமானுக்கு அபிஷேகங்களுடன் சங்காபிஷேகம் நடைபெற்றது. விவசாயம் செழிக்கவும் , மழை பெய்ய வேண்டியும் ,நாடு நலம் பெறவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல், திருமங்கலம் காட்டு மாரியம்மன் கோயிலிலும் 108 சங்காபிஷேகம் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu