திருமங்கலம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உபகரணம்

திருமங்கலம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம்  பொதுமக்களுக்கு பாதுகாப்பு உபகரணம்
X

திருமங்கலம் நகர் தெற்கு தெரு காந்தி சிலை பகுதியில் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் விநியோகித்த  அன்னை வசந்தா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்

திருமங்கலம் அன்னை வசந்தா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர் வழங்கினர்

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகர் தெற்கு தெரு காந்தி சிலை பகுதியில் அன்னை வசந்தா தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் திருமங்கலம் மக்கள் நல சங்கம் சார்பாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தற்போது பரவிவரும் மூன்றாம் அலை கொரோனா தோற்று பாதிப்பு ஏற்படாத வகையில் கபசுர குடிநீர் ,முக கவசம் மற்றும் மக்களுக்கான சமூக இடைவெளி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ஓய்வு பெற்ற வட்டாட்சியாளர் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, அன்னை வசந்தா டிரஸ்ட் நிறுவனர் ரகுபதி மற்றும் தலைவர் அமுதவல்லி ,செயலாளர் ஆர். சித்ரா, பொருளாளர் அருள்ஜோதி, மற்றும் மக்கள் நல சங்கம் நிர்வாகிகள் சக்கையா, சீனிவாசன் ,வழக்கறிஞர் வல்லபாய் பட்டேல் பேரவையின் மாநில தலைவருமான ராஜசேகரன், இருளப்பன் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வீடு வீடாக சென்று வழங்கி கபசூர குடிநீர் வழங்கினர்.

Tags

Next Story
துணை வட்டாட்சியரிடம் ரூ. 2 கோடி மோசடி..! 3 போ் மீது வழக்குப் பதிவு..!