திருமங்கலம் நகர் பகுதியில் சாலை மோசம்: பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டம்

திருமங்கலம் நகர் பகுதியில் சாலை மோசம்: பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டம்
X

திருமங்கலம் திருமங்கலம் நகர் மாருதி சிட்டி கலைநகர் பாலாஜி நகர பகுதியில் சாலைமோசமானதைக் கண்டித்து நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 

திருமங்கலத்தில் சாலை சேதமடைந்ததுள்ளதைக் கண்டித்து பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்தால் பரபரப்பு

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகர் மாருதிசிட்டி, பாலாஜி நகர், கலை நகர், ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் இதுவரை சாலைகள் இல்லாத நிலையில், அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர். இதுகறித்து பலமுறை சுங்குராம் பட்டி பஞ்சாயத்து தலைவரிடம் பல முறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது .

இதனால் தற்போது பெய்த கன மழையால் அப்பகுதி சாலைகள் முழுவதும குண்டும் குழியுமாக அப்பகுதி சேறும் சகதியாக காணப்படுகிறது.இதனால் அப்பகுதி வாழ் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இன்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சகதி தண்ணீர் தேங்கிய இடத்தில் ஆண்களும் பெண்களும் நாற்று நடவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏ3படுத்தியது.இப்பகுதிக்கு சாலை அமைத்து தர வேண்டும் மேலும் தண்ணீர் தேங்கி உள்ள இடங்களை சுத்தம் செய்து தர கோரிக்கை முன்வைத்துள்ளனர். இப்பகுதியில் காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாகவும் குற்றம் சாட்டினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!