திருமங்கலம் நகராட்சி 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பூர்ணிமா நாகராஜன் போட்டி.

திருமங்கலம் நகராட்சி 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பூர்ணிமா நாகராஜன் போட்டி.
X

திருமங்கலம் நகராட்சி 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பூர்ணிமா நாகராஜன்

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 15வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பூர்ணிமா நாகராஜன் தீவிர வாக்கு சேகரிப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பாஜக கட்சி சார்பில் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஆர். பூர்ணிமா நாகராஜன் போட்டியிடுகிறார்.

மதுரை மாவட்டம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருமங்கலம் நகராட்சி 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கு செவிலியர் படிப்பு பயின்ற ஆர் .பூர்ணிமா நாகராஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

இவரது கணவர் நாகராஜன் இவர் பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு துறை மாவட்ட செயலாளராக பொறுப்பில் உள்ளார். ஆர் .பூர்ணிமா நாகராஜன் மருத்துவத்துறையின் செவிலியர் படிப்பு பயின்றவர் ஆவார்.மேலும் இவர் முதலுதவி சிகிச்சை குறித்த படிப்பையும் பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இவர் ஒரு சமூக ஆர்வலர் ஆவார்.சிறுவயது முதல் ஏழைகள் மீது அதிக பற்று கொண்டவர் எனக் கூறப்படுகிறது. தன்னுடைய படிப்பிற்கு பணியாற்றாமல் ஆக இருந்தாலும் .ஏழைகளுக்கு சிகிச்சைக்கு உதவி செய்வது விபத்தில் சிக்கியவர்களை நேரில் பார்க்கும்போது தனது படிப்பின் திறமையை காட்டும் வகையில் முதல் உதவிகளை செய்து வந்துள்ளார்.

மேலும் கொரோன காலங்களில் அவர் குடியிருக்கும் 15வது பகுதிகு மாயோன் நகர் ,காளிமுத்து நகர், மதுரை ரோடு, பெரியர் நகர், சண்முகம் நகர் ,போலீஸ் லைன் ஆகிய பகுதிகளுக்கு கபசுரக் குடிநீர் ,நலத்திட்ட உதவிகள் என பல்வேறு தொண்டுகள் செய்துள்ளார்.இதற்கு உடந்தையாக இவர் கணவரும் தனது மனைவியின் சமூக தொண்டினை வரவேற்று உறுதுணையாக இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை இப்பகுதி மக்களுக்கு செய்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் திருமங்கலம் நகர் பகுதியிலும் பல்வேறு இடங்களில் சென்று தங்களால் இயன்ற உதவிகளை செய்துள்ளனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் நேரடி பார்வையில் உள்ளாட்சித் தேர்தலில் உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்து 15வது வார்டு பகுதிக்கு போட்டியிடுகிறார்.இந்நிலையில் இவர் இப்பகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஈடுபட்டு வருகிறார்.

இவர் தன்னை வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் மாயோன் நகர், சண்முகம் நகர், மதுரை ரோடு, காளிமுத்து நகர், பெரியார் நகர், போலீஸ் லயன் ஆகிய பகுதிகளுக்கு மூன்று திட்டங்களை பெற்றுத் தருவதாக கூறியுள்ளார்.

1 .பாதாளசாக்கடை அமைத்தல். 2. மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வரும் அனைத்து விதமான ஏழை எளிய மக்களுக்கு வரக்கூடிய அனைத்து உதவிகளையும் பெற்று தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.மேலும் இப்பகுதியில் கடந்த 10 வருடங்களாக வீடு புகுந்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.இப்பகுதியில் பாதுகாப்பற்ற நிலையில் இப்பகுதி மக்கள் வாழ்கிறது குறிப்பிடத்தக்கது.இதனை கருத்தில் கொண்டு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஆர் .பூரணிமாநாகராஜன் அனைத்து வீதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.

மேலும், இப்பகுதியில் குறைதீர்க்கும் மையம் அமைத்து தருவதாகவும் கூறியுள்ளார்.ஆர்.பூர்ணிமா நாகராஜன். 15வது வார்டு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி வீடு வீடாக சென்று பெரியவர், சிறியவர் பாராமல் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Tags

Next Story