திருமங்கலம் நகராட்சி 17வது வார்டில் வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு

திருமங்கலம் நகராட்சி 17வது வார்டில் வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு
X

கையெழுத்திடாமல் வாக்களித்ததாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர்.

திருமங்கலம் நகராட்சி 17வது வார்டு வாக்குப்பதிவின் போது கையெழுதிடாமல் ஓட்டு போட்டதாகக் கூறி வாக்கு பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு பெண்கள் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள இந்த வாக்குச்சாவடியில் தற்போது வரை 640 வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் பெண்கள் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்ய வரும் வாக்காளர்கள் 160 பேர் பதிவேட்டில் கையெழுத்திடாமல் ஓட்டளித்ததாக தகவல் அறிந்து வந்த திமுக நிர்வாகிகள் மற்றும் மாற்று வேட்பாளருக்கு சாதகமாக அதிகாரிகள் வேலை பார்ப்பதாக கூறி தேர்தல் அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

இச்சம்பவம் வாக்கு சாவடியில் பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து வந்த திருமங்கலம் டிஎஸ்பி சிவகுமார் திமுக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

தேர்தல் அதிகாரிகளிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் தேர்தல் நாள் அறிவிக்கப்படும் எனக் கூறி தேர்தல் அலுவலர் உத்தரவின் பேரில் காவல்துறையினரால் வாக்குச்சாவடி மூடபட்டன.

Tags

Next Story
ai automation digital future