மதுரை அருகேயுள்ள பிரபல ஆலையின் பெயரில் போலி மின்னஞ்சல் உருவாக்கியவர் கைது
போலியான மின்னஞ்சல் முகவரியை உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட பாலாஜி
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரில் உள்ள தியாகராஜர் நூற்பு ஆலையின் பெயரில் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிய நபரை சைபர்கிரைம் போலீஸார் கைது செய்தனர்,
திருமங்கலம் அருகே கப்பலூரில் உள்ள தியாகராஜர் நூற்புஆலையின் பெயரில் மோசடியில் ஈடுபடுவதற்காக போலியான மின்னஞ்சல் முகவரியை அடையாளம் தெரியாத நபர் உருவாக்கியுள்ளார். இது குறித்து கடந்த மார்ச் 21 ஆம் தேதி ஆலை நிர்வாகம் சார்பில் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் சார்மிங் ஒய்ஸ்லின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதுதொடர்பான விசாரணையில் தியாகராஜர் ஆலையின் முன்னாள் ஊழியர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து தியாகராஜர் ஆலையின் பெயரில் போலியான மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிய பாலாஜி என்பவரை நேற்று (ஏப்.25) காவல் துறையினர் கைது செய்தனர். சைபர் குற்றங்களால் பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால் தயக்கம் இன்றி புகார் அளிக்கலாம் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu