குடிபோதையில் தகராறு - வாலிபர் கொலை

குடிபோதையில் தகராறு - வாலிபர் கொலை
X

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் மேலத்தெருவில் பன்னீர்செல்வம் (வயது 21) என்பவர் வசித்துவருகிறார். இவர் கொட்டகை போடும் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினரான பழனிமுருகன் (20) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் குடிபோதையில் இருந்த இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் பழனி முருகன் பன்னீர்செல்வத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.

படுகாயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பன்னீர்செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து திருமங்கலம் தாலுகா போலீசார் பழனி முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!