மதுரை அருகே தி.மு.க. சார்பில் புத்தாண்டையொட்டி பெண்களுக்கு கோலப்போட்டி

மதுரை அருகே கோலப்போட்டியில் வெற்றி பெற்ற ஒரு பெண்ணிற்கு பரிசு வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த தே. கல்லுப்பட்டியில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டும் புதுவருடத்தை முன்னிட்டும் மதுரை தெற்கு மாவட்ட கழக சார்பாக தே.கல்லுப்பட்டி பேரூராட்சியில் கோலம் போடும் போட்டி நடைபெற்றது
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை மற்றும் போட்டியில் கலந்து கொண்ட 4000 பெண்களுக்கு ஆறுதல் பரிசையும் மாவட்ட கழக செயலாளர் மு. மணிமாறன் அவர்கள் வழங்கினார். மேலும் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாண்டி முருகன், பேரூர் கழக செயலாளர் முத்து கணேசன் பொறுப்பேற்று நடத்தினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், தே. கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், மாவட்ட அவை குழு தலைவர் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், திருமங்கலம் நகர செயலாளர் .மு.சி.சோ. முருகன், திருப்பரங்குன்றம் துணை சேர்மன் ஜெயகுமார் ,தகவல் தொழில் நுட்ப அணி திருமங்கலம் ஒருங்கிணைப்பாளர் ராஜா பிரபாகரன், மற்றும் டீ கல்லுப்பட்டி ஒன்றிய மகளிர் அணி மற்றும் நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu