மழைவேண்டி அய்யனார் கருப்பசாமிக்கு ஏழூ ஊராண் பங்காளிகள் கிடா விருந்து

மழைவேண்டி அய்யனார் கருப்பசாமிக்கு ஏழூ ஊராண் பங்காளிகள் கிடா விருந்து
X

அய்யனார் கருப்புசாமிக்கு பூஜை செய்யும் பூசாரிகள்.

மதுரை திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் கிராமத்தில் மழைவேண்டி அய்யனார் கருப்பசாமிக்கு கிடா விருந்து படைத்து வணங்கினர்.

மதுரை, பொண்ணமங்கலம் அருகே அய்யனார் கருப்பசாமிக்கு மழை வேண்டி ஏழு ஊராண் பங்காளிகள், கழுங்குபட்டி மக்கள் மற்றும் அருகே உள்ள கிராம பொதுமக்களும் சேர்ந்து கிடாவிருந்து படைத்து வணங்கினர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பொண்ணமங்கலம் கிராமத்தில் உள்ளது அய்யனார் கருப்பசாமி கோவில். அந்த கோவிலுக்கு ஏழு ஊராண் பங்காளிகள் கழுங்குபட்டி மக்கள் மற்றும் அருகே உள்ள கிராம பொதுமக்களும் சேர்ந்து மழைவேண்டி வேண்டுதல் வைத்தனர். அதற்காக அவர்கள் நாற்பத்தி எட்டு நாள் விரதம் இருந்தனர்.

அய்யனார் கோவில் அன்னதான விருந்தில் கலந்துகொண்ட பக்தர்கள்.

48வது நாளில் 50க்கும் மேற்பட்ட கிடாவெட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இவ்விழாவில் ஏராளமான பொது மக்கள் அய்யனார் கருப்பசாமியை தரிசனம் செய்து வணங்கினர். கோவிலுக்கு வருகை தந்த அனைவரும் அன்னதான அசைவ விருந்தில் பங்கேற்றனர். இவ்விழா இப்பகுதியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Tags

Next Story
ai healthcare products