நகராட்சி பேரூராட்சித் தேர்தல் : திருமங்கலத்தில் திமுக அவசர ஆலோசனைக் கூட்டம்

நகராட்சி  பேரூராட்சித் தேர்தல் : திருமங்கலத்தில்  திமுக அவசர ஆலோசனைக் கூட்டம்
X

மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் திருமங்கலம் தொகுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி. கல்லுப்பட்டி ஒன்றியம் மற்றும் பேரையூர் தாலுகாவில் திமுகவினர் ஆலோசனை

நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் அதிமுகவை வீழ்த்தி திமுகவை வெற்றி பெறச்செய்வது தொடர்பாக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு மணிமாறன் தலைமையில் திருமங்கலம் தொகுதிக்குள்பட்ட பேரையூர், கல்லுப்பட்டி பகுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த டி. கல்லுப்பட்டி ஒன்றியத்திலும் பெயரை ஒரு தாலுகாவிலும் என்று மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏர்போர்ட் பாண்டியன், தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பாண்டி முருகன், டி கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், நகர செயலாளர் முத்து கணேசன் , பேரையூர் நகர செயலாளர் பாஸ்கரன், திருமங்கலம் மாணவரணி நகர செயலாளர் முத்துகணேசன், சேடபட்டி முத்து, தொழில்நுட்ப அணி பாசபிரபு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை வீழ்த்தியதை போல், வருகின்ற நகராட்சி, பேரூராட்சி தேர்தலிலும், கபட நாடகம் ஆடிய அதிமுகவை காணாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!