திருமங்கலம் அருகே குடும்ப பிரச்சினையில் மாமியார் வெட்டிக்கொலை

திருமங்கலம் அருகே குடும்ப பிரச்சினையில் மாமியார் வெட்டிக்கொலை
X

பைல் படம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நெடுமதுரையில் மாமியாரை கொலை செய்துவிட்டு தலைமறைவான மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நெடுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி மனைவி காளியம்மாள்(48) கடந்த சில வருடங்களுக்கு முன்பு பால்பாண்டி இறந்துவிட்டார் .

காளியம்மாள் மகள் ஜெயா என்ற ஜெயக்கொடி(29). கீழ உப்பிலிகுண்டு கிராமத்தைச் சேர்ந்த அழகர் மகன் முனியாண்டி(34). முனியாண்டிக்கும் ஜெயக்கொடிக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது.

கடந்த 5 மாதத்திற்கு முன்பு தனிக்குடித்தனம் செல்வதற்காக ஜெயாவின் 15 பவுன் நகையை அவருடைய அம்மா பெயரில் அடகு வைத்துள்ளனர்.இந்நிலையில் அடிக்கடி குடும்பப் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் ஜெயா தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்துவிடுவார்.

மேலும் இது தொடர்பாக அடகு வைத்த நகையை மீட்பதற்கு மாமியார் காளியம்மாள் மருமகனிடம் பணம் கேட்டுள்ளார்.ஆனால் கொடுக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது..கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு இது சம்பந்தமாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜெயா புகார் கொடுத்துள்ளார் .

போலீசார் முனியாண்டியிடம் வீட்டு ஒத்திபத்திரம் அடகு வைத்த ரசீது உள்ளிட்ட கணக்குகளை வருகிற ஞாயிற்றுக்கிழமை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொண்டுவருமாறு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாமியார் வீட்டிற்கு வந்தபோது ஏற்பட்ட தகராறில் மாமியார் காளியம்மாளை மருமகன் முனியாண்டி சரமாரியாக வெட்டியுள்ளார் .மேலும் ஜெயக்கொடி காலிலும் கையிலும் வெட்டியுள்ளார் .

இதில் காளியம்மாள் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். தகவலறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காளியம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் படுகாயமடைந்த ஜெயாவை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தப்பியோடிய மருமகன் முனியாண்டியை தேடிவருகின்றனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது