ஓட்டுகளை திருடும் அமைச்சர் -திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு

ஓட்டுகளை திருடும் அமைச்சர் -திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு
X

ஓட்டை திருட வந்துள்ளார் அமைச்சர் ஆர்பி உதயகுமார் என திருமங்கலம் தொகுதி திமுக வேட்பாளர் குற்றம் சாட்டினார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட சமத்துவபுரம் கிராமத்தில் திமுக சார்பில் போட்டியிடும் மணிமாறன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இதில் சுமார் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது அந்த ஊரில் சாலை வசதி குடிநீர் பிரச்சனை அனைத்தையும் நான் வெற்றி பெற்றவுடன் செய்து தருவேன் என்று உறுதி அளித்தார்.திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மக்களிடம் காசு கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என்று நினைக்கிறார். உங்களது ஓட்டை திருட வந்துள்ளார் அமைச்சர் ஆர்பி உதயகுமார் என குற்றம் சாட்டினார்.

பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய், கர்ப்பிணி பெண்களுக்கு 24 ஆயிரம் ரூபாய், கொரோனா நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு இலவச பஸ்பாஸ், படித்த பட்டதாரிகளு க்கு வேலைவாய்ப்பு, ஆகியவை திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக இந்த உடன் அனைத்தும் ஒரு மாத காலத்துக்குள் நடக்கும் என்று மணிமாறன் வாக்கு சேகரிப்பின் போது கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!