திருமங்கலம் அருகே பெரியகருப்பன்ன ஏழுசாமி கோவில் மஹா சிவராத்திரி விழா

திருமங்கலம் அருகே பெரியகருப்பன்ன ஏழுசாமி கோவில் மஹா சிவராத்திரி விழா
X

பொன்ன்மங்கலம் கிராமத்தில் பெரிய கருப்பண்ண (எ) ஏழு சாமி கோவில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பெட்டி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

பொன்னமங்கலம் கிராமத்தில் பெரிய கருப்பண்ண எழுசாமி கோவில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பெட்டி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொன்ன்மங்கலம் கிராமத்தில் பெரிய கருப்பண்ண (எ) ஏழு சாமி கோவில் மஹா சிவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைந்துள்ள பொண்ணமங்கலம் கிராமத்தில் ஏழு பங்காளிகள் ஏழூரான் பொண்ணமங்கலம் கிராம பொதுமக்கள் சேர்ந்து பெரிய கருப்பண்ணன் (எ) ஏழு சாமி கோவிலில் மாசி தோறும் மஹா சிவராத்திரியன்று பெட்டி எடுப்பு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மாசி மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று பொன்னமங்கலம் கிராமத்தில் பெரிய கருப்பண்ணன் (எ) ஏழு சாமி கோவிலில் இன்று அதிகாலை கருப்பனுக்கு சிறப்பு பூஜை செய்து, சிந்துபட்டி கிராமத்தில் உள்ள வெங்கடாசல பெருமாள் கோவிலில் பொன்னமங்கலம் கிராமத்திற்கு பாத்தியப்பட்ட பெரியகருப்பன் (எ)ஏழு சாமி கோவில் பெட்டி எடுத்து மாலை 7 மணியளவில் பொன்னமங்கலம் கிராமத்திற்குள் பெரியகருப்பன் ஏழுசுவாமி பெட்டி வீதிதோறும் ஊர்வலமாக வந்தது மக்கள் பெரிய கருப்பண்ணசுவாமி கோவில் விளக்கு பூஜை செய்து மாலை மரியாதை செய்து தேங்காய் உடைத்து பயபக்தியுடன் வழிபட்டனர்.

இவ்விழாவில் வாணவேடிக்கைகள் மேலும் கரகாட்டம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என கொண்டாடப்பட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!