திருமங்கலம் நகராட்சி 14-ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளருக்கு மதுரை எம்பி பிரசாரம்
வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 14 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக கட்சியின் கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் க. பாண்டிச்செல்வி இன்று சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மற்றும் கூட்டணி கட்சி திமுக திருமங்கலம் நகர்மன்ற முக்கிய நிர்வாகிகள் ,கூட்டணி கட்சி காங்கிரஸ் மதுரை மாவட்ட செயலாளர் ஜெயராமன், உள்ளிட்டோர் வீதி வீதியாக சென்று வினோத முறையில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர்.
பிரசாரத்தின்போது வேட்பாளர் க்.பாண்டிச்செல்வி வீட்டுக்குள் காய்கறி நறுக்கிக் கொண்டு இருந்த வாக்காளரக்கு காய்கறி நறுக்கிக் கொடுத்து பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்பது இப்பகுதி மக்களுக்கு வாக்குறுதியாக குறைதீர்ப்பு மையம், பூங்கா அமைத்தல், சாலை பராமரிப்பு வசதி, உள்ளிட்ட அத்தியாவசிய அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
பிரசாரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சு .வெங்கடேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நீட் தேர்வு குறித்து தமிழகம் மட்டுமே நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பி வருகிறது.விரைவில் அதற்கான முடிவுஏற்படும், மேலும் 2026க்குள் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூர் பகுதியில் அமைக்கப்படும். மேலும் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் கடந்த அதிமுக ஆட்சி பல நவீன யுக்தியை பயன்படுத்தி ஸ்மார்ட் ஸ்டைலில் பல கோடி சுருட்டல் நடந்துள்ளது .அதற்காக அமைக்கப்பட்ட தனிக்குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பிரசாரத்தின் போது காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்லக்கண்ணு ,கப்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், மற்றும் மூர்த்தி திமுக 14வது வார்டு செயலாளர் பால்பாண்டி, மற்றும் வார்டு பொறுப்பாளர் அழகுமலை, மற்றும் தேர்தலுக்காக திமுக நிர்வாகிகள் வார்டு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், சுந்தரபாண்டியன், நயினர், அஜித்குமார், சிவா மற்றும் காங்கிரஸ் திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் உள்ளிட்ட ஆண்கள், பெண்கள் கலந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu