உள்ளாட்சித் தேர்தல்: முக்கிய நகர வீதிகளில் காவல்துறை கொடி அணிவகுப்பு

உள்ளாட்சித் தேர்தல்:  முக்கிய நகர வீதிகளில் காவல்துறை  கொடி அணிவகுப்பு
X

 திருமங்கலத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார்  தலைமையில் காவலர்கள் அணிவகுத்துச் சென்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.

திருமங்கலம் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் காவலர்கள் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது

மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற இருக்கிறது. மதுரை மாவட்டம் திருமங்கலம், மேலூர் உசிலம்பட்டி ஆகிய நகராட்சிகளுக்கும் மற்றும் 9 பேரூராட்சி களுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு உட்கோட்டத்தில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள் தலைமையில், கொடி அணிவகுப்பு நடத்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்கள் அதனை எடுத்து மதுரை மாவட்டத்திலுள்ள தேர்தல் நடக்கும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் அந்தந்த காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 வாக்குபதிவை முன்னிட்டு தேர்தல் அமைதியாக நடக்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் நடக்காமல் இருக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஊட்டும் வகையில் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு முக்கிய வீதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று மேலூர் உட் கோட்டத்தில் உள்ள மேலூர் நகராட்சி மற்றும் ஏ. வல்லாளபட்டி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் மற்றும் திருமங்கலத்தில் முக்கிய வீதிகள் வழியாக வந்தனர், மேலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் மற்றும் திருமங்கலத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் காவலர்கள் அணிவகுத்துச் சென்று கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும் இதர பகுதிகளில் நடத்த காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
ai in future education