ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்: அதிமுகவினர் அஞ்சலி

ஜெயலலிதாவின்  ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்: அதிமுகவினர் அஞ்சலி
X

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள அம்மா கோயிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் டி. குன்னத்தூர் அருகே உள்ள அம்மா கோயிலில் உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருமங்கலம் நகர் ஒன்றியம், தொகுதி அதிமுக முக்கிய நிர்வாகிகள், டி.குன்னத்தூர் அம்மா கோயிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த டி.குன்னத்தூரில் அமைந்திருக்கும் அம்மா கோயிலில் இன்று மறைந்த முதல்வர் .ஜெயலலிதாவின் ஐந்தாவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் உருவ சிலைக்கு மாலை மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர். மேலும், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் உருவச் சிலைக்கு மாலை மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர்.

இதில், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன், கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், மதுரை மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆர்யா திருமங்கலம், ஒன்றிய சேர்மன் லதா ஜெகன், திருமங்கலம் முன்னாள் நகர செயலாளர் ஜெ.டி விஜயன் உரப்பனூ,ர் சாமிநாதன், கரடிக்கல் ஆண்டிச்சாமி, திருப்பரங்குன்றம் கார்த்திக் திடீர்நகர் பாலா, பொன்னமங்கலம் ஜெ.ஜெயமணி,, வழக்கறிஞர் அணி முத்துராஜா, வெங்கடேஷ், , உரப்பனூர் விவேக் மற்றும் டி. கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி ,மற்றும் முக்கிய நிர்வாகிகள் உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் சோழவந்தான் தொகுதி முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.



Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!