திருமங்கலம் அருகே மனைவியை கொலை செய்த கணவர் கைது

திருமங்கலம் அருகே  மனைவியை கொலை செய்த கணவர் கைது
X

திருமங்கலம் அருகே கொலை செய்யப்பட்ட முருகம்மாள்

Husband arrested for murdering wife

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டியில பி. ஆர். நகரில் மனைவியை கம்பியால் தாக்கி படுகொலை செய்த கணவரை கைது செய்து போலீசார் விசாரணை.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே டி. கல்லுப்பட்டி பி. ஆர் நகரில் அருள்முருகன் . இவரது மனைவி முருகம்மாள்(40) தனியார் மில்லில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 14 வயதுடைய 9 ஆம் வகுப்பு பயிலும் சிறுவன் விக்னேஷ் என்பவர் உள்ளார். இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் அருள்முருகன் மனைவி முருகம்மாலை கம்பியால் தலையில் தாக்கிபடுகொலை செய்துள்ளார்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் விக்னேஸ்வரன் அலறல் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தே து முருகம்மாள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார் . இதை கண்ட சிறுவன் அலறியடித்து அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார் .

கணவன் கிருஷ்ணன் அங்கிருந்து தப்பி டி. கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இச்சம்பவம் குறித்து டி. கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுபார்த்த பொழுது முருகம்மாள் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.உடனடியாக கைரேகை நிபுணர், மோப்பநாய் வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு முருகம்மாளின் சடலத்தை கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலைக்கான காரணத்தை விசாரணை செய்தனர்.

விசாரணையில் முருகம்மாளின் தங்க நகையை கணவர் அருள்முருகன் அடமானம் வைத்து அடையாளம் தெரியாத நபருக்கு பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் அருள் முருகன் அதிக குடிப்பழக்கம் உள்ளவர் என்பது குறிப்பிடதக்கது.இந்நிலையில் பணம் பற்றி மனைவி முருகம்மாள் கேட்டதால் நேற்று முதல் கணவனுக்கும் மனைவிக்கும் தகராறு ஏற்ப்பட்டுள்ளது.இந்நிலையில ஆத்திரத்தில் இரவு தூங்கிக் கொண்டிருந்த முருகமலை கணவன் அருள்முருகன கம்பியால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார்.போலீசார் அருள்முருகனை கைது செய்துவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெற்ற மகன் கண் முன்னே தாலி கட்டிய கணவன் குடிபோதையில் பலத்த கம்பியால் தலையை யும் முகத்தையும் சிதைத்து கொடூர கொலை வெறி செய்த சம்பவம் டிகல்லுப்பட்டி பகுதியிலும் உறவினர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!