திருமங்கலம் முனியாண்டி கோயிலில் ஆடு பலியிட்டு பொதுமக்களுக்கு அசைவ அன்னதானம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்துள்ள முனியாண்டி திருக்கோவில்
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அமைந்துள்ள முனியாண்டி திருக்கோவிலில் அசைவ அன்னதானம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
.இத் திருவிழாவில் பங்கேற்ற இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அசைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.திருமங்கலம் சோழவந்தான் சாலையில் மொக்கையன் அம்பலம் நகரில் புகழ்பெற்ற முனியாண்டி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை தினத்தன்று இந்த கோவிலில் கிடா வெட்டும் நிகழ்வும் இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் நேற்று மதியம் முதல் இன்று மதியம் வரை தை அம்மாவாசை இருந்ததால் அதிகாலை பதினோராம் ஆண்டு கிடாவெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது .
பக்தர்கள் நேர்த்தி கடனாக செலுத்திய ஆட்டுக்கிடாய்கள் கோவிலில் வெட்டப்பட்டன. தொடர்ந்து முனியாண்டி சுவாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கப்பட்ட ஆடுகளை கொண்டு அசைவ அன்னதானம் இன்று மதியம் முதல் இரவு வரை நடைபெறும்.கோவிலின் ஐதீகப்படி மண் தரையில் அமர்ந்து பக்தர்கள் அசைவ அன்னதானம் பெற்று சென்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், முனியாண்டி கோவிலில் சாமியை வேண்டிக் கொண்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பதால் பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள் நினைத்த காரியம் நிறைவேறியவுடன் ஆடுகளை கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவார்கள். .மேலும் குழந்தைபாக்கியம் வேண்டுபவர்கள் நோய்நொடி நீங்க பவர்கள் இந்த அசைவ அன்னதானத்தில் சாப்பிட்டால் அனைத்து நோய் நொடிகளும் நீங்கும் என்பது ஐதீகம். இதையொட்டி நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில், சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu