திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆச்சு? முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கேள்வி

DMK Election Vakuruthigal
X

DMK Election Vakuruthigal

DMK Election Vakuruthigal-திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று என திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்

DMK Election Vakuruthigal-அதிமுக கழக அமைப்பு தேர்தல் திருமங்கலம் அருகே குன்னத்தூர் அம்மா கோவிலில் நடைபெற்றது தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சரும், தொண்டமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் எஸ்.பி வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் .உதயகுமார் தலைமையில் தேர்தல் நடைபெற்றது.

திருமங்கலம் நகர 27 வார்டு செயலாளர்கள் தங்களது விருப்ப மனுக்களை அளித்தனர். இதனைத்தொடர்ந்து கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன், வாடிப்பட்டி சோழவந்தான், உசிலம்பட்டி, ஏழுமலை, பேரையூர், பல்வேறு பகுதிகளில் இருந்து விருப்ப மனுக்கள் அளித்தனர். மேலும் திருமங்கலம் தொகுதி சோழவந்தான் தொகுதி உசிலம்பட்டி தொகுதி உறுப்பினர்கள் தேர்தலில் விருப்ப மனுக்களை அளித்தனர்.

அப்பொழுது எஸ். பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மக்களுக்கான அரசு அதிமுக அரசு., 50 ஆண்டு கனவான கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக அரசு. கொண்டுவந்த திட்டங்களில் மதுரை செழிப்பாக காணப்படுகிறது. பத்தாண்டு காலத்தில் சொத்து வரியை அதிமுக அரசு ஏற்றவில்லை., திமுக அரசு 98ல் சொத்து வரியை உயர்த்தினர். அதேபோல் தற்போது திமுக அரியணையில் ஏறிய பின்பும் சொத்து வரியை உயர்த்தி உள்ளனர்.

திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் வரிகளை பன்மடங்கு உயர்த்துவது. திமுகவிற்கு வழக்கம்.

குடிமராமத்து திட்டம் கரிகாலச் சோழன் காலத்தில் கொண்டு வந்த திட்டம்., அதை கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அதிகமான டிஎம்சி தண்ணீரை சேமித்து வைப்பதற்காக கொண்டு வந்த திட்டம் குடிமராமத்து திட்டம்.

திமுக மத்திய அரசுடன் எதிர்ப்பை காட்டுவது போல் நடித்து தமிழக மக்களை ஏமாற்றுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு பின் மக்கள் அனுமதியுடன் நடைபெறும் சித்திரை திருவிழாவில் 10 லட்சம் மக்கள் கூடுகின்ற இடத்தில் பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகளை குறித்து சட்டமன்றத்தில் அதிமுக சார்பில் பேசினோம்., திமுக அரசின் மெத்தன போக்கினால் தற்போது மதுரையில் போதுமான பாதுகாப்பு சித்திரைத் திருவிழாவில் இல்லாததால் இரண்டு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் குடும்பத்திற்கு 20 லட்சம் வழங்க வேண்டும் அவர்களது குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பாலங்கள் திட்டங்களை மட்டுமே திறந்து வைத்து திமுக திட்டம். வகுத்தது போல் பிலிம் காட்டுகிறது. மக்களுக்கு தெரியும் இது அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்று. .

திமுக அரசு விளம்பரம் தேடும் அரசாக திமுக அரசு செயல்படுகிறதே தவிர மக்களுக்கான திட்டங்கள் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. நீட்தேர்வு அரசுக்கு வந்தவுடன் திமுக ரத்து செய்யும் எனக் கூறியது என்ன ஆச்சு? என கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் கூறுகையில் தான் அமைச்சராக இருந்தபோது மதுரை வைகை பாலம் மேலும் பல்வேறு திட்டங்களை முயற்சியில் கொண்டுவந்ததை தற்பொழுது திறந்துகொண்டு மார்தட்டிக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!