முழு ஊரங்கிற்கு மதுரை மக்கள் முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

முழு ஊரங்கிற்கு மதுரை மக்கள் முழுஒத்துழைப்பு வழங்க  வேண்டும்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
X
முழு ஊரங்கிற்கு மதுரை மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்கி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வேண்டுகோள்

இதுகுறித்து செய்தியாளர்களிடத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 35,873 பேர் பாதிக்கப்பட்டனர் இதில் 448 நபர்கள் பலியாயினர். மதுரையில் 1352 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு 28 பேர் பலியாகி உள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பு ஏற்பட்டு அதன்மூலம் உயிர்ப்பலி ஏற்படுவதால் மதுரை மக்களிடத்தில் பெரிய அச்சம் சோகம் உருவாகி வருகிறது

தற்போது 12,875 நபர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கியமாக மதுரையில் கொரோனா பணியில் ஈடுபட்டு வரும் முன் களப்பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. இதில் மதுரை மாவட்டத்தில் 12 மருத்துவர்கள் 7 செவிலியர்கள் உட்பட மருத்துவம் சார்ந்த 25 பேர் பாதிப்படைந்துள்ளனர்

தற்போது நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையாக நாளை முதல் ஒரு வாரம் தளர்வு இல்லா முழு ஊரடங்கை புதிய அரசு அறிவித்துள்ளது. மக்களின் ஒத்துழைப்பு இன்றி ஊரடங்கில் நாம் வெற்றி பெற முடியாது.

முதல் அலையின் போது‌ முந்தைய அரசு போட்ட முழுஊரங்கிற்கு நல்ல ஒத்துழைப்பை மக்கள் வழங்கினார்கள். அதேபோல் மதுரை மாவட்ட மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் வகையில் ஒருவாரம் தளர்வில்லா முழு ஊரங்கிற்கு ஒத்துழைப்பை வழங்கி தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறினார்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்