மதுரை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர். பி .உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்

மதுரை  அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர். பி .உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்
X

மதுரை புறநகர் மாவட்ட அதிமுக  சார்பில் முன்னால் அமைச்சர் ஜெயகுமார் கைதை கண்டித்து முன்னாள் அமைச்சர்கள்  உதயகுமார், வளர்மதி பங்கேற்ற மாபெரும் கணடன ஆர்ப்பாட்டம்.

திருமங்கலம் அருகே அம்மா கோவிலில் முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி. உதயகுமார், வளர்மதி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்

மதுரை புறநகர் மாவட்டம் சார்பில் முன்னால் அமைச்சர் ஜெயகுமார் கைதை கண்டித்து முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்ற மாபெரும் கணடன ஆர்ப்பாட்டம் நடந்தது..

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைந்துள்ள டி. குன்னத்தூரில் அமைந்திருக்கும் அம்மா கோவிலில் இன்று முன்னாள் வருவாய் துறை அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். பி .உதயகுமார் மற்றும் முன்னாள் சத்துணவுத் துறை அமைச்சர் வளர்மதி தலைமையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது நடவடிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின்போது அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் அவர்கள் கூறியதாவது திமுக அராஜக ஆட்சியை ஆண்டுகொண்டு பழிவாங்கும் நோக்கோடு அதிமுக மீது பல்வேறு அவதூறு செய்திகளை பரப்புவதும் ,பொய் வழக்கு பதிவு செய்வதும் வன்மையாக அதிமுக சார்பில் கண்டிக்கிறோம். மக்களுக்கான ஆட்சி என்று பொய் பரப்புரையை கூறி மக்களை ஏமாற்றும் சூட்சமம் ரொம்ப நாள் நீடிக்காது.

இரண்டு முறை அதிமுக ஆட்சி செய்தது மக்களுக்கான பணிகளையும், மக்களுக்கான திட்டங்களையும் வரலாறு பதிக்கும் அளவில் அம்மா ஆட்சி செய்த போதும், எடப்பாடியார் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மக்களுக்காக பணி செய்து பெயர் பெற்றனர் . மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ 5 ஆயிரம் தருவதாக திமுக சொன்னது கொடுக்கவில்லை?

மக்களை ஏமாற்றும் சதி திட்டமான பொய் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசு நினைத்துப் பார்க்க வேண்டும். பொங்கல் பரிசாக முன்னாள் முதல்வர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் பொங்கல் பரிசாக வீடுதோறும் ரூ..2500 வழங்கினார்கள். நினைவிருக்கட்டும். உங்களை போல் போய் பரப்புரையும் பொய் திட்டங்களையும் அறிவிக்கவில்லை .கள்ள ஓட்டு போட்டு ஜனநாயகத்தை வேரோடு அளித்த ஒரு குற்றவாளியை பிடித்துக் கொடுத்த எங்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றவாளியா? ஜனநாயகத்தை ஒழிக்க நினைத்த கள்ள ஓட்டு போட்ட நபர் குற்றவாளியா? என்றார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசுகையில், தற்போது திமுக உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட்டு ஜெயித்தது நிரூபணமானது. எங்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையும் களவுமாக பிடித்து மக்கள் முன் நிறுத்தினார் . இவர் குற்றவாளியா? கள்ள ஓட்டு போட்டு பணத்தை கொடுத்து ஓட்டு போட்டு ஜெயித்த திமுக அரசு .அமைச்சர் ஜெயக்குமார் மீது போடப்பட்ட வழக்கு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் உங்கள் ஆட்சியைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அம்மா ஆட்சியின் போது எதிர்கட்சி அந்தஸ்தைக்கூட இழந்த கட்சி திமுக என்பது நினைவிருக்கட்டும். எதுவும் நிரந்தரம் இல்லை. திமுக ஆட்சிக்கு, வருகின்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார் வளர்மதி.

இதில் உசிலம்பட்டி சட்டமன்ற உருப்பினர் ஐயப்பன்,சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் திருமங்கலம் யூனியன் சேர்மன் லதாஜெகன், திருமங்கலம் நகர செயளாலர் ஜெ.டி.விஜயன், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட தலைவர் ஆண்டிச்சாமி, கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், கழக் சிறுபான்மை பொருளாளர் ஜான்மகேந்திரன், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அ. அன்பழகன், அம்மா சாரிட்டபில் டிரஸ்ட் செயளாலர் ஆர்.பி.யு.பிரியதர்ஷினி அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....