மதுரையில் இறுதியாண்டு மருத்துவ மாணவர் தூக்கிட்டு தற்கொலை

மதுரையில் இறுதியாண்டு மருத்துவ மாணவர் தூக்கிட்டு தற்கொலை
X
ராம்பிரசாத்
மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் அமைந்துள்ள அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் நெய்வேலியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆசிரியர் மகன் ராம் பிரசாத் வயது( 22) மருத்துவராக இறுதி ஆண்டு பயின்று வந்தார் இவர் தனியார் வீடு ஒன்றை எடுத்து நண்பர்களுடன் சேர்ந்து தங்கி இருந்து படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று ராம்பிரசாத் அனைத்து மாணவர்களும் கல்லூரிக்கு சென்ற பின் தனியாக இருந்த மாணவர் தங்கியிருந்த அறையின் கதவை தாழ்ப்பாள் போட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .

இவருடன் தங்கியிருந்த சகமாணவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது ராம்பிரசாத் தூக்கில் தொங்கியவாறு சடலமாக உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாணவரின் சாவில் மர்மம் ஏதும் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை

மேலும் மாணவரின் குடும்பத்தார் மற்றும் உடன் தங்கியிருந்த மாணவர்களிடையே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவர் படிப்பு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் இறுதியாண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்