அதிமுக ஆட்சி தொடரவே தேர்தல்- ஆர்பி உதயகுமார்

அதிமுக ஆட்சி தொடரவே தேர்தல்- ஆர்பி உதயகுமார்
X

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தொடர்வதற்காகவே இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது என வருவாய்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள டி.குன்னத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வந்து அமைச்சர் ஆர்பி உதயகுமார் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தொடர்வதற்காகவே இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது விவசாயத்தில், நீர் மேலாண்மையில், நிர்வாக திறமையில், முதல் இடம் பெற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை எல்லோரும் விரும்புகின்றனர். அதிமுக அமோக வெற்றி பெறும் என அமைச்சர்உதயகுமார் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!