வங்கிப்பணித் தேர்வுகளில் தமிழர்கள் புறக்கணிப்பு திராவிடகழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

வங்கிப்பணித் தேர்வுகளில் தமிழர்கள் புறக்கணிப்பு  திராவிடகழகம் கண்டன ஆர்ப்பாட்டம்
X
வங்கிப் பணித் தேர்வில் தமிழர் புறக்கணிப்பை கண்டித்து திருமங்கலத்தில் திராவிட கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழர் புறக்கணிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அஞ்சல் அலுவலகம் முன்பு இன்று திராவிட கழகம் மற்றும் கூட்டணி கட்சி மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியோர் இணைந்து என்று ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழர்களை வஞ்சிப்பவதாக குற்றம்சட்டி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் தமிழர்களை வஞ்சிக்கும் நிலை தற்போது கண்டிக்கதக்கது என குற்றம் சாட்டியுள்ளனர் . திராவிட கழகம புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் பி.முத்து கருப்பு, தலைமையில் நடைபெற்றது..

இதில், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சிவகுருநாதன், மாவட்ட செயலாளர் எரிமலை, மாவட்ட இளைஞரணி செயலாளர் விரகனூர் கணேசன் மற்றும் ம்திமுக நகர செயலாளர் அனிதா பால்ராஜ், அவைத்தலைவர் சிவனாண்டி, பொருளாளர் முருகன், நகர துணை செயலாளர் கணேசன், காசி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் சுப்புக்காளை ஆகியோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai marketing future