6 லட்சத்தில் நாடக மேடை: முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கேற்றி தொடக்கம்

6 லட்சத்தில்  நாடக மேடை: முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கேற்றி தொடக்கம்
X

உரப்பனூர் இந்திரா காலனியில் நாடக மேடையே திறந்து வைத்து  பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் கீழ உரப்பனூர் இந்திராகாலனியில் ரூ 6 லட்சம் மதிப்பில் நாடக மேடையை திறந்து வைத்தார்

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ உரப்பனூர் கிராமத்தில் முன்னாள் வருவாய்த் துறை அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். பி. உதயகுமார் ரூ 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கீழ உரப்பனூர் இந்திரா காலனியில் நாடக மேடையே குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். மேலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன், திருமங்கலம் ஒன்றிய சேர்மன் லதா ஜெகன், மற்றும் தமிழழகன் ஆண்டிச்சாமி, சுமதி, சாமிநாதன், விவேக், ஜெயமணி, கவுன்சிலர் பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!