திமுக கழக உள்கட்சி தேர்தல்: தேர்தல் பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு தாக்கல்
திருமங்கலம் திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மனுக்கள் பெறும் தேர்தல் நடத்தும் பொருப்பாளர் பூவிருந்தவல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி மற்றும் தலைமை உறுப்பினர் டாக்டர் குமார்
தமிழகம் முழுவதும் திமுக 15வது உள்கட்சி தேர்தல் விருப்ப மனு தாக்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரில் திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் திமுக தேர்தல் நடத்தும் பொருப்பாளர் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி மற்றும் தலைமை உறுப்பினர் டாக்டர் குமார் முன்னிலையில் திருமங்கலம் ,உசிலம்பட்டி நகராட்சிகள், ஏழுமலை, பேரையூர், டீ. கல்லுப்பட்டி பேரூராட்சிகள் ஆகிய வார்டு செயலாளர்கள் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் நகர் மற்றும் பேரூர் திமுக கழக வார்டு பொறுப்புகளுக்கு திமுக அடிப்படை தொண்டர்கள் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னிலையில் கழக தேர்தல் பொறுப்பாளர்களிடம் மனுக்களை அளித்தனர்.
உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லதா அதியமான் , தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன் ,மாவட்ட கவுன்சிலர் முத்துராமன் , மாவட்ட இளைஞரணி செயலாளர் மதன்குமார், திருமங்கலம் நகராட்சி சேர்மன் ரம்யா முத்துக்குமார், துணை சேர்மன் ஆதவன் அதியமான், திருமங்கலம் நகர் கவுன்சிலர்கள் சின்னசாமி ,காசி பாண்டி, ஜஸ்டின் திரவியம், திருகுமார் ,நகர இளைஞரணி ராஜ்குமார் ,ஹரி ,குட்டி பாலு, கௌதம், வார்டு பிரதிநிதி விக்கி, வேலவன் ஆடியோஸ் சுதாகர், பி.ஆர்.சி .முத்துப்பாண்டி, கரந்தமலை,பி.ஆர்.சி. செந்தில் ,கரந்தமலை ,ராஜா, செந்தில், பி.வி.அஜய்கண்ணன், வீரராகவன் சுந்தர், எஸ்.முருகன், வள்ளிமுருகன், குட்டி அய்யனார் மற்றும் திமுக கழக மாநில, மாவட்ட ,முக்கிய நிர்வாகிகள் மற்றும் திமுக கழக தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu