திருமங்கலம் நகர் மன்ற வேட்பாளர் சர்மிளா அனல் பறக்கும் பிரச்சாரம்

திருமங்கலம் நகர் மன்ற வேட்பாளர்  சர்மிளா அனல் பறக்கும் பிரச்சாரம்
X

தீவிர பிரசாரம் மேற்கொள்ளும் திமுக வேட்பாளர் சர்மிளா விசாகன்

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சர்மிளா விசாகன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 13வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் சர்மிளா விசாகன் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு 13வது வார்டுக்குட்பட்ட வெங்கட சாஸ்திரி தெரு, பெருமாள் கோவில் சந்து, இராஜாஜி தெரு, ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்

இவருடன் திருமங்கலம் நகர செயலாளர் முருகன், விசாகன், வாகைகுளம் முத்துராமன், வள்ளி முருகன், ஆகியோரும் பிரசாரம் மேற்கொண்டனர். பிரசாரத்தின் போது பொதுமக்களின் குறைகள் அடிப்படை வசதிகள் அனைத்தையும் பெற்றுத்தர பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்து பிரசாரம் மேற்கொண்டார்.

உடன் ஏராளமான திமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!