திருமங்கலம் நகராட்சி 3வது வார்டில் திமுக வேட்பாளர் பெல்ட் முருகன் வாக்கு சேகரிப்பு

திருமங்கலம் நகராட்சி 3வது வார்டில் திமுக வேட்பாளர்  பெல்ட் முருகன்  வாக்கு சேகரிப்பு
X

திருமங்கலம் நகராட்சியின்  03 வது வார்டில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் பெல்ட் முருகன்.

பொதுமக்களின் நலனுக்காக வீதிகளில் கண்காணிப்பு கேமரா அமைப்பதாக திமுக வேட்பாளர் பெல்ட் முருகன் வாக்குறுதி அளித்தார்

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 03 வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.பெல்ட் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருமங்கலம் நகர்மன்ற 3வது வார்டு வேட்பாளராக கடந்த 2011ஆம் ஆண்டு விவசாயி வி பெல்ட் முருகன் நகராட்சி நகர் மன்ற உறுப்பினராக திமுகவில் 3-வது வார்டு பொது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டார்.அப்பொழுது அவர் இப்பகுதிகளுக்கு சாக்கடை வசதி , குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, மேலும் அடிப்படை வசதிகள், பேவர் பிளாக் கல் பதித்தல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி இருந்தார்.

இவருடைய சாதனையை பாராட்டி மீண்டும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு. மணிமாறன், இவருக்கு திருமங்கலம் நகராட்சி 3 -வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு திருமங்கலம் நகர செயலாளர் மு. சி .சோ. முருகன் பரிந்துரை செய்து, போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது..

இந்நிலையில், 3வது வார்டு பகுதி ராஜீவ் நகர், அண்ணாநகர், மம்சாபுரம், அம்பலகாரர் தோட்டம் ஆகிய பகுதிகளில் வி.பெல்ட் முருகன் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.பிரசாரத்தின் போது பெல்ட் முருகன் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக சாதனைகளை பொதுமக்களிடம் கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கண்காணிப்பு கேமரா வீதிகள் தோறும் அமைப்பதாக வாக்குறுதி கொடுத்தும், ஆள்துளை மின்னியக்க பம்பு ,மேலும் பாதாள சாக்கடை திட்டம், குறைதீர்ப்பு மையம், இ- சேவை மையம், மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் ஆகிய வாக்குறுதிகளைச் சொல்லி திமுக வேட்பாளர் பெல்ட் முருகன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இவருடன் தேர்தல் பொறுப்பாளர் தமிழழகன், சுந்தர்,ராஜா, கௌதம், ராஜ்குமார், ஹரி,அராஃபத், முகேஷ், மேலும் திமுக மகளிரணி பெண்கள், திமுக உறுப்பினர்கள் உடன் சென்று வீதிவீதியாக பொதுமக்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்து வருகிறார். திமுக முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் வி.பெல்ட் முருகன் பதவி வகித்த காலத்தில் செய்த சாதனைகளை மக்கள் நினைத்து மீண்டும் பெல்ட் முருகன் வெற்றிபெற செய்வதாக வாக்குறுதி இப்பகுதி மக்கள் கொடுத்துள்ளனர.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!