கொரோனா கால பணி ஊக்கத்தொகை வழங்கவில்லை: திருமங்கலம் மருத்துவமனை பணியாளர்கள் புகார்

பைல் படம்
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் கொரோனா ஊக்கத்தொகை பாரபட்சமாக ஒருசிலருக்கு மட்டுமே வழங்கியதாக ஊழியர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரில் அனைத்து வசதிகளும் கூடிய அரசு அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. கொரோனா காலங்களில் திருமங்கலம் தொகுதி மக்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
தமிழக அரசு கொரோனா காலங்களில் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா ஊக்கத்தொகை வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மட்டுமே கொரோனா ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்த பணியாளர்கள் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மருந்தாளர்களுக்கு ஊக்கத்தொகை தற்போது வரை வழங்கவில்லை. எனவே, தங்களுக்கு அறிவித்த ஊக்க தொகையை விரைவில் தொகையை வழங்க முன்வருமாறு தமிழக முதல்வருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் மருத்துவ துறை பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் கொரோனா காலத்தில் இம்மருத்துவமனையில் பணி புரியும் சக பணியாளர்கள், உசிலம்பட்டி மருத்துவமனையில் பணிபுரியும் சில பணியாளர்களுக்கு 2 பகுதியாக ஊக்கதொகை பதிவு செய்யப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா காலத்தில் குடும்பங்களை மறந்து தன் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு பணியாற்றியதை கருத்தில்கொண்டு ஊக்கதொகை வழஙக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu