வனவிலங்கிற்கு வைத்த மின்சார வயரில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாப பலி

வனவிலங்கிற்கு வைத்த மின்சார வயரில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாப பலி
X

கருப்பசாமி 

திருமங்கலம் அருகே, காட்டுப்பன்றியை கொல்வதற்காக வைக்கப்பட்ட மின்சார வயரில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா மகன் கருப்பசாமி வயது (19 ); இவர், உசிலம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்கு புல்லுக்காக தோட்டத்திற்கு சென்று உள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

கருப்பசாமி உறவினர்கள் பல இடங்களில் தேடிச்சென்று பார்த்தபோதும், கருப்பசாமி காணவில்லை. பின்னர், தோட்டத்தின் அருகே விழுந்து கிடந்ததை கண்டறிந்தனர். உறவினர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர் .அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கருப்பசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அப்பகுதியை சேர்ந்த விவசாயி சக்திவேல், மக்காச்சோளம் பயிரில் சேதப்படுத்தும் காட்டுப்பன்றியை கொல்வதற்காக, மின்சார வயர் மூலம் மின் வேலி அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மின்சார வேலியில் சிக்கி கருப்பசாமி இறந்து விட்டதாக கூறி, சம்மந்தப்பட்ட நபரை கைது செய்யக்கோரி, உறவினர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம், திருமங்கலம் காவல் துறை கண்காணிப்பாளர் சிவகுமார் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இறந்த வாலிபர் கருப்பசாமி உடலை திருமங்கலம் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுுக்கு அனுப்பினர். இதனிடையே, மின்வேலி பொருத்திய சக்திவேல் என்பவரை, திருமங்கலம் தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!