இலங்கைவாழ் தமிழர்கள் முகாமில் தற்போது பெய்த கனமழையால் வீடுகளில் சேதம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள இலங்கை வாழ் தமிழர்கள் முகாமில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அனீஸ்தசேகர்
இலங்கை தமிழர்கள் முகாமில் வடகிழக்கு பருவமழையின் சேதமான வீடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த தொப்பூர் உச்சப்பட்டியில் இலங்கைவாழ் தமிழர்கள் முகாமில் வடகிழக்கு பருவ கன மழையால் சேதமடைந்த வீட்டினை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் இன்று பார்வையிட்டார் இதில் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு சேதமான வீடுகளை சரிசெய்ய நிவாரண நிதி தருவதாக கூறினார்.
மேலும், தொடர்ந்து இரண்டு நாள் கனமழை பெய்ய இருக்கும் நிலையில், பாதுகாப்பாற்ற வீடுகளை பார்வையிட்டு அங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்களை அருகிலுள்ள சமூகநல கூடங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் பாதுகாப்பாக இருக்க கூறியுள்ளார் மேலும் இடிந்து நாசமானது களுக்கு நிவாரணம் விரைவில் கிடைக்க முன்னேற்பாடு செய்துள்ளதாகக் கூறினார்.
மதுரை மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழு 40 பேர் வந்துள்ளதாக கூறியுள்ளார் மேலும் மதுரை மாவட்டத்தில் கண்மாய்கள் பெரும் பெருகியது மகிழ்ச்சி உள்ளதாக கூறினார் தற்போது பெய்த மழையில் கண்மாய்கள் தெரிகிறது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் மேலும் மதுரை மாவட்ட பகுதிகளில் கண்மாய் கரைகள் பழுதாகி இருந்தால் அதனை ஆய்வு செய்யவும் சரிசெய்யவும் முன்னேற்பாடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் இதனால் பொதுமக்கள் எந்தவித பயமும் இன்றி இருக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu