திருமங்கலத்தில் எம்.பி.மாணிக் தாகூர் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

திருமங்கலத்தில் எம்.பி.மாணிக் தாகூர் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
X

மத்திய அரசைக்கண்டித்து மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நடைபெற்ற மெழுகு வர்த்தி ஏந்தும் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் தொகுதி எம்பி மாணிக்கம்தாகூர்

மோடி அரசை கண்டித்து திருமங்கலம் காங்கிரஸ் புறநகர் மாவட்டம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்

மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக திருமங்கலம் நகரத்தில் மத்திய மோடி அரசின் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும். மத்திய மோடி அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த 720 விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர் அம்மாபட்டிஎம்.பாண்டியன் தலைமையில். திருமங்கலம் நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கரிசல்பட்டி எஸ். சௌந்திரபாண்டிமுன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், சிறப்பு விருந்தினராக அகில இந்திய பொதுச் செயலாளர், தெலுங்கானா மாநில பொறுப்பாளர் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் ப. மாணிக்கம் தாகூர் பங்கேற்று தொடங்கி வைத்தார். இதில் பெருந்திரளாக மாநில செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட துணைத்தலைவர்கள் நகர பேரூராட்சி வட்டார கமிட்டி தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!