மதுரை: விவசாயியிடம் லஞ்சம் வாங்கியதாக உதவி மின்பொறியாளர் கைது

மதுரை: விவசாயியிடம் லஞ்சம் வாங்கியதாக  உதவி மின்பொறியாளர் கைது
X

முகமது உபேஷ்

மதுரை மேற்கு பிரிவு மின் வாரிய அலுவலகத்தில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

மதுரை திருமங்கலம் அடுத்துள்ள பொண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் காட்டு ராஜா. இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது நிலத்திற்கு மின்சாரம் பெறுவதற்காக, மின் உதவி பொறியாளர் முகமது உபேஷ் 20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் சூர்யா தேவி , கண்ணன் உள்ளிட்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர். இதில் லஞ்சம் பெற்றது உறுதியானதை தொடர்ந்து, மின் உதவி பொறியாளர் முகமது உபேஷை கைது செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!