குவாரி வெடிவிபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய சிறுவன்

குவாரி லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தும் கிராம மக்கள்
மதுரைதிருமங்கலம் அருகே பொன்னமங்கலம் வழியாக சொரிக்காம்பட்டி கிராமம் செல்லும் சாலையில் அதிக அளவில் கல் குவாரி உள்ளது. இதனால் விவசாயிகள் இப்பகுதியில் ஆடு மாடு மேய்க்க செல்லும்போதும், தோட்ட வேலைகளுக்கு செல்லும் போதும் உயிர் பயத்தில் சென்று வருகின்றனர்.
நேற்று அப்பகுதியில் குவாரியில் அதிக மருந்து செலுத்தப்பட்ட வெடி வேடிக்கப்பட்டதால், அக்கம் பக்கத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது கற்கள் விழுந்து பெரும் காயத்தை ஏற்படுத்தியது. ஒரு சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மண்டை உடைந்தது. மயிரிழையில் 8 வயது சிறுவன் உயிர் தப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குவாரி லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்,
இப்பகுதியில் கிராமத்தில் இருக்கும் கல் குவாரிகளில் பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படும்போது ஏற்படும் புகைமண்டலம் கிராமத்தை மூடிவிடுகிறது. மேலும் இக்கிராமம் வழியாக செல்லும் வாகனங்கள் மீது கற்கள் விழுந்து வாகனங்கள் சேதம் அடைகிறது. ஆடுகள் மாடுகள் மீது கற்கள் விழுந்து உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. மேலும் மக்களின் மீது கற்கள் பட்டு உயிர்சேதம் ஏற்படும்முன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் இதற்கு முன்பு பலமுறை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அவர்களிடமும், அலுவலகத்திலும் திருமங்கலம் வட்டாட்சியரிடமும் மனு கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. பொதுமக்களின் நலன் கருத்தில் கொண்டு தமிழக அரசு தானாக முன்வந்து குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யுமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu