திருமங்கலத்தில் வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து பாஜகவினர் நூதன வாக்கு சேகரிப்பு

திருமங்கலத்தில் வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து பாஜகவினர் நூதன வாக்கு சேகரிப்பு
X

பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் அகில இந்திய சட்ட உரிமை கழகம் மாநில துணை தலைவர் பி .செந்தில்.

திருமங்கலம் நகராட்சி 12வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பி .தமிழ்மணியை ஆதரித்து பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி 12வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பி .தமிழ்மணியை ஆதரித்து காட்டு மாரியம்மன் கோவில் சந்து மற்றும் அன்னகாமு தோட்டம் இராஜாஜி தெரு ஆகிய பகுதிகளில் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் அகில இந்திய சட்ட உரிமை கழகம் மாநில துணை தலைவர் பி .செந்தில் பொதுமக்களிடையே தீவிர வாக்கு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பிரசாரத்தின்போது இனிப்பு காரம் கடையில் வேட்பாளர் தமிழ்மணி மற்றும் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், மாநிலத் துணைத் தலைவர் செந்தில் அவர்கள் இனிப்பு காரங்களை சமைத்து நூதன வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வாக்கு சேகரிப்பின் போது பாரதிய ஜனதா கட்சி மாநில துணை தலைவர் பி .செந்தில் மாவட்ட பொதுச்செயலாளர் மூவேந்திரன், கோட்ட அமைப்பு பொது செயலாளர் கணேஷ் ஜி, நகர தலைவர் சின்னசாமி, சட்டத்துறை செயலாளர் நாகராஜன் , அகில இந்திய சட்ட உரிமை கழக நகர செயலாளர் கார்த்திகேயன், நகர இளைஞரணி தலைவர் , நல்லையா, வேட்பாளர்கள் பூர்ணிமா, சக்திவேல், கருப்பையா, ஈஸ்வரி, ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில சாதனைகளை விளக்கி மக்கள் பெற்ற உதவிகளையும் நினைவுபடுத்தி தற்போது திருமங்கலம் நகர் மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்களிக்க வலியுறுத்தி அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
why is ai important to the future