தஞ்சை மாணவி தற்கொலைக்கு நீதிகேட்டு மதுரை புறநகர் மாவட்ட பாஜக ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாணவி தற்கொலைக்கு நீதிகேட்டு மதுரை புறநகர் மாவட்ட பாஜக  ஆர்ப்பாட்டம்
X

மதுரை மாவட்டம் திருமங்கலம் பெரியார் சிலை முன்பு மதுரை புறநகர் மாவட்ட பாஜகவினர் 

தஞ்சை மாணவி தற்கொலையில் காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாககூறி மதுரை புறநகர் மாவட்ட பாஜக கண்டனஆர்ப்பாட்டம் நடத்தினர்

தஞ்சை மாணவி மதமாற்ற வற்புறுத்தி மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக கூறி தற்கொலை செய்த மானவிக்கு நீதி கேட்டு மதுரை புற்நகர் மாவட்ட பாஜக சார்பில் திருமங்கலம் பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட பொது செயலாளர் வழக்கறிஞர் மூவேந்திரன் , மாவட்ட துணைத்தலைவர் சரவண குமார் தலைமையில் திருமங்கலம் நகர தலைவர் சின்னச்சாமி முன்னிலையில் மற்றும் ஒன்றிய தலைவர்கள் சுரேஷ், ஜெயக்குமார், மற்றும் கழக வளர்ச்சி மனோகரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயேந்திரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ரவீந்திரன், மற்றும் நிர்வாகிகள் முத்து, பாண்டி , கப்பலூர் பாலா, ஜோதிடர் ஆலம்பட்டி சுந்தராஜபெருமாள், கண்ணன், சக்திவேல், வெங்கடேஷ் ஆகியோர் கலந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்தில், மாணவி தற்கொலை வழக்கை திசை திருப்ப முயற்சிக்கும் காவல்துறையை கண்டித்தும் ,இந்துமத சக்தியை அழிக்க நினைப்பதாக குற்றம்சாட்டியதுடன், மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தற்கொலை செய்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!