திருமங்கலம்: டாஸ்மாக் கடைகளை அகற்ற பாஜக வலியுறுத்தல்
கோப்பு படம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாப்டூரில், டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி, பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில துணைத் தலைவர் வலசை முத்துராமன் தலைமையில், கோரிக்கை முழக்கம் எழுப்பப்பட்டது. அப்போது, அவர் கூறியதாவது: சாப்டூர் பகுதியில் அழகர்சாமி கோவிலுக்கும் அருகில் உள்ள 100 அடி தூரத்தில் இரண்டு டாஸ்மார்க் கடைகளும் அமைந்துள்ளது. இரு கடைகளுக்கும் 100 அடி இடைவெளி மட்டுமே உள்ளது.
மேலும் அருகில் கனரா வங்கி பெட்ரோல் பங்க், காவலர் குடியிருப்பு, தொடக்கப்பள்ளி உள்ள நிலையில் வங்கி வாடிக்கையாளர்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இந்த இரண்டு கடைகளையும் உடனடியாக அகற்றாவிட்டால் பொதுமக்களுடன் இணைந்து பெரும் திரளான போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu