மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டம்
X

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரில் ராஜாஜி சிலை முன்பு பாரதிய ஜனதா கட்சி மதுரை புறநகர் மாவட்டம் சார்பில் திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு திமுக அரசை கண்டித்து பாஜவினர் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் ராஜாஜி சிலை முன்பு மதுரை புறநகர் மாவட்டம் சார்பில் பாரதிய ஜனதா கட்சி திமுக கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்ட துணை தலைவர் பா. .சரவணகுமார்,மாவட்ட செயலாளர் எம் .சின்னச்சாமி,ஓபிசி அணி மாவட்ட தலைவர் ஜி. மூவேந்திரன்,வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் கே. கே .கிருஷ்ணன், முன்னாள் திருமங்கலம் நகர் மன்ற தலைவர் மு .சி .சோ. சி .நிரஞ்சன்,திருமங்கலம் நகரத் தலைவர் பி.தமிழ்மணி,வடக்கு ஒன்றிய தலைவர் ஜே .சுரேஷ்.போராட்டத்தில் சிறப்பு விருந்தினராகபேராசிரியர் சீனிவாசன். மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் கோகுல் பாலாஜி,மற்றும் நகர பொதுச் செயலாளர் விஜயேந்திரன்,இளைஞரணி துணைத் தலைவர் பாண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் கணபதி.மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் டி .ஆர்.பி. சுரேஷ், நகர இளைஞரணி தலைவர் எஸ். பி .அருள் என்ற பிரகதீஸ்வரன், அரசு தொடர்பு பிரிவு அர்ஜுன்,மற்றும்மகளிர் அணி ராஜி,மஞ்சுளா, உள்ளிட்டோர் பங்கேற்று உண்ணாத போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள மகளிர் காண ஆயிரம் ரூபாய் மேலும் தமிழக மக்களின் நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினர். மேலும் முதியோர் உதவித்தொகை முழுமையாக கொடுக்கப்படவில்லை. தற்போது உள்ள திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை சீர்கெட்டு கிடக்கிறது என கூறினர். விருதுநகர் பாலியல் குற்றச்சம்பவம் உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் பாலியல் குற்ற சம்பவங்கள் நடத்தியுள்ளனர் மேலும் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, என திமுக நிர்வாகிகள் இறங்கியுள்ளதாகவும்,

திருமங்கலம் அருகே அமைந்துள்ள கப்பலூர்,சுங்கச்சாவடி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அகற்றுவதாக தேர்தல் வாக்குறுதியாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறினார். அந்த வாக்குறுதி என்னாச்சு? அதுமட்டுமல்லாமல் திருமங்கலம் நகர் கற்பக நகர் பகுதியில் மேம்பாலம் கட்டுவது என பல்வேறு கோரிக்கைகள் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தது எல்லாம் முடக்கத்தில் உள்ளதாக பேசியவர்கள் குற்றம் சாட்டினர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself