திருமங்கலம் நகராட்சி தேர்தல்: விறுவிறுப்பாக வேட்புமனுத்தாக்கல்

திருமங்கலம் நகராட்சி தேர்தல்: விறுவிறுப்பாக வேட்புமனுத்தாக்கல்
X

திருமங்கலம் நகராட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்  

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி தேர்தலுக்கு அனைத்து கட்சியினரும் விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கல் செய்தனர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி வார்டு வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். அதிமுக மட்டும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யவில்லை .என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக ,பாஜக ,மதிமுக, அமமுக, காங்கிரஸ், நாம் தமிழர் ,சுயேட்சை ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் விறுவிறுப்பாக திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் ஜெயகோபால் அவர்களிடம் மனுத்தக்கல் செய்தனர். வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு தங்களது பலத்தை காண்பிக்கும் வகையில் மேளதாளங்கள் முழங்க வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வந்தனர்.

இதுவரை திருமங்கலம் நகராட்சி தேர்தலுக்கு 46 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!