அதிமுக பொன்விழா கொண்டாட்டம்: முன்னாள் அமைச்சர் உதயகுமார் அன்னதானம் வழங்கல்

அதிமுக  பொன்விழா கொண்டாட்டம்:  முன்னாள் அமைச்சர் உதயகுமார் அன்னதானம் வழங்கல்
X
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அதிமுகவின் 50 ஆண்டு பொன்விழாவை கொண்டாடிய அதிமுகவினர்

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அதிமுகவின் 50 -ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைக்கிணங்க தமிழகம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில், திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூரில் உள்ள அம்மா மணிமண்டபம் கோயிலில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அதிமுகவின் தொடக்ககால மூத்த உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து பொற்கிழி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. இவ்விழாவில் முக்கிய நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் அனைவரும் பங்கேற்றனர்

Tags

Next Story
ai based agriculture in india