கொத்து புரோட்டா போட்டு கொடுத்து அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கொத்து புரோட்டா போட்டு கொடுத்து அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

திருமங்கலம் நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக நகர செயலாளர் ஜெ.டி. விஜயன் பரோட்டா போட்டு கொடுத்தார். 

திருமங்கலம் நகராட்சி அதிமுக வேட்பாளர் ஜெ.டி.விஜயன், கொத்து பரோட்டா போட்டுத்தந்து, உணவக வாடிக்கையாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சித் தேர்தலில் அதிமுக நகர செயலாளர் ஜெ.டி. விஜயன், 1-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். நேற்று, சோழவந்தான் ரோடு பகுதியில் தீவிர பிரச்சரம் மேற்கொண்டார். அப்போது, அப்பகுதி உணவகத்தில் பரோட்டா போட்டுக் கொண்டு, சாப்பிட வரும் மக்களிடையே ஒருமணி நேரத்திற்கு மேலாக நின்று வாக்கு சேகரித்தார்.

பின்னர், 1வது வார்டு சோழவந்தான் ரோடு பகுதி பொதுமக்கள், ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும் வேட்பாளர் ஜெ.டி விஜயன் சிறியோர் காலில் விழுந்து கூட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இவர், முன்னாள் நகராட்சி நகர் மன்ற தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!