மறைந்த முதல்வர் எம்ஜிஆர் 34 வது நினைவு நாள்: அம்மா கோயிலில் அதிமுகவினர் மரியாதை

மறைந்த முதல்வர் எம்ஜிஆர் 34 வது நினைவு நாள்: அம்மா கோயிலில்  அதிமுகவினர் மரியாதை
X

திருமங்கலம் அருகேயுள்ள அம்மா கோயிலில் உள்ள எம்ஜிஆர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

திருமங்கலம் அருகே உள்ள அம்மா கோயிலில் எம்.ஜி.ஆர் உருவசிலைக்கு எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் மரியாதை செலுத்தினார்

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 34 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் இன்று திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் எம்.ஜி.ஆர் உருவச் சிலைக்கும் புரட்சித்தலைவி மறைந்த முதல்வர்செல்வி ஜெ .ஜெயலலிதா அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினர்.இதையொட்டி, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ,அம்மா சாரிடபில் செயலர் ஆர் பி உதயகுமார் பிரியதர்ஷினி மற்றும் கள்ளிகுடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், திருமங்கலம் நகர செயலாளர் விஜயன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர்.லதா ஜெகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கபி. காசிமாயன், ஆலம்பட்டி கிளைச் செயலாளர் தளபதி செல்வா, மாவட்ட மீனவர் அணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டி, மற்றும் உசிலம்பட்டி, திருமங்கலம், சோழவந்தான் தொகுதி அதிமுக வினர் ஆலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிளை செயலாளர் முருகேசன் மற்றும் பலர் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story