திருமங்கலம் : சுயேச்சை வேட்பாளர்களுக்கு 30 வகை சின்னங்கள்
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருமங்கலம் நகரில் 27 வார்டுகள் உள்ளன. தேர்தல் நடத்துவதற்கு நாற்பத்தி ஒன்பது வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு 30 வகையான சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன . சுயேச்சை வேட்பாளர்களுக்கு 30 வகையான சின்னங்கள் ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தொடக்கத்தில் முக்கிய கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் சுணக்கம் காட்டின. அதனால் சுயேச்சை வேட்பாளர்கள் விறுவிறுப்பாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தற்போது முக்கிய கட்சிகளும் அவர்களது கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து வேட்பு மனு தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu