மதுரை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது

மதுரை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது
X
மதுரை மாவட்டத்தில் கொள்ளை ,மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதுரை மாவட்டத்தில் சமூகவிரோதச் செயல்கள், கொலை, மணல் கடத்தல், போதைப்பொருட்கள் கடத்தல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தடுப்புக் காவல் சட்டத்தின்படி, காவலில் அடைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்கள்.

அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் டவுன் காவல் நிலையத்தில் தாக்கலான கன்னக்களவு வழக்கில் சம்பந்தப்பட்ட நபர். முத்துராஜ் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் பேரையூர் உட்கோட்டத்தில் மணல் கடத்தல் வழக்கில் ஈடுபட்ட அலெக்ஸ்பாண்டியன் ஆகியோரின் மீது நடவடிக்கையை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

இவ்வழக்குகளில் கைது செய்யப்பட்ட 2 பேர்களின் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் பரிந்துரையின் பேரில், மதுரை மாவட்ட ஆட்சியர், மேற்படி 2 நபர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி மதுரை மத்திய சிறைச்சாலையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த மேற்படி 2நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணை வழங்கப்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!