பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை வசதி விரைவில் ஏற்பாடு-அமைச்சர் சொன்னது
மதுரை தோப்பூரில் 500 படுக்கை வசதிகளுடன் தயாராகி வரும் கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை தோப்பூரில் 500 படுக்கை வசதிகளுடன் தயாராகிவரும் கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி நேரில் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் தோப்பூரில் ஆக்சிஜன் படுக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இதற்காக 110 கிலோ வாட் மின்சாரம் சப்ளை செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு (நோயாளிகளுக்கு என்பதற்கு பதிலாக பயனாளிகள் என பேசினார்) 25 கழிப்பறைகள் மற்றும் 10 குளியலறைகள் தயாராகி வருகிறது என தெரிவித்தார்.
தொடர்ந்து மதுரையில் கடந்த இரு தினங்களாக நோய்த்தொற்று சதவீதம் குறைந்து வருவதாகவும் தமிழக அரசு மேற்கொண்டு என்ன நடவடிக்கைகள் எடுக்க உள்ளது என செய்தியாளர்களின் கேள்விக்கு இனி தொற்று நமது எண்ணத்திற்கு ஏற்ப குறைந்து வருகிறது. அதற்கு பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்கள் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செய்திகளை கொண்டு சென்றதால் இன்னும் குறையும்.
மதுரை ராஜாஜி மருத்துவமனை பொறுத்தவரையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது அதை நிறைவு செய்யும் வகையில் இன்னும் ஒரு சில நாட்களில் பணிகளை நிரப்பும் வேலை நடைபெற்று வருகிறது. தொற்றுநோய் வராமல் இருக்கவும் வந்தவர்களை காப்பாற்றவும் இரண்டு தினங்களாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது ஆக்சிசன் தட்டுப்பாடு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் அதனை சரிசெய்து ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்கிற நிலையை உருவாக்குவோம்.
தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை இல்லை என்ற நிலையை உருவாக்கத்தான் தோப்பூரில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் தயாராகிவருகிறது ஓரிரு தினங்களில் 200 படுக்கைகள் பயன்பாட்டிற்கு வரும்.
தனியார் மருத்துவமனைகளை விட ராஜாஜி மருத்துவமனையில் தொற்று உள்ளவர்களுக்கு இடமில்லை என்கிற நிலைமையே மாற்றுவோம் என கூறினார் கிராமப்புறங்களில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கிராமப்புறங்களில் பாதிக்கப்படுபவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விரைவில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும் என தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu