திருமங்கலம் நகராட்சி சேர்மன் தேர்தல் ஒத்திவைப்பு
திருமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகளில் திமுக 18 இடங்களிலும் அதிமுக 6 இடங்களிலும் தேமுதிக 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது. இதில் தேமுதிக வேட்பாளர் திமுகவில் இணைந்ததால் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நகர்மன்ற தலைவருக்கான திமுக வேட்பாளராக ரம்யா முத்துக்குமார் அறிவிக்கப்பட்டிருந்தார். அதே சமயத்தில் திருமங்கலம் நகர செயலாளர் முருகன் தனது மருமகள் ஷர்மிளாவை தலைமையை எதிர்த்து தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். மேலும் தனது ஆதரவாளர்களான 12 உறுப்பினர்களுடன் திருமங்கலம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தார். இந்நிலையில் ரம்யா முத்துக்குமார் தரப்பினர் மற்றும் அதிமுக வார்டு உறுப்பினர்கள் என 14 பேர் இந்த தேர்தலை புறக்கணித்தனர். இதையடுத்து போதிய உறுப்பினர்கள் இல்லாததால் தலைவர் மறைமுக தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனை நகராட்சி ஆணையர் டெரன்ஸ் லியோன் அறிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu