கபசுரக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்;

கபசுரக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்;
X
மதுரை திருமங்கலத்தில்/

கழக அம்மா பேரவை சார்பில் திருமங்கலத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் கபசுரக் குடிநீர் திட்டத்தை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்

முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர் பி உதயகுமார் கழக அம்மா பேரவை சார்பில் திருமங்கலத்தில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும குடிநீர் திட்டத்தினை அம்மா திருக்கோயிலில் இருந்துதொடங்கி வைத்தார் பேசியதாவது

கழக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி கே பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க திருமங்கலம் தொகுதியில் உள்ள 324 கிராமங்களில் உள்ள மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிடும் வண்ணம் அம்மா கோவிலில் கபசுர குடிநீர் காய்ச்சப்பட்டு தினந்தோறும் 10 கிராமங்கள் வீதம் வழங்கப்படுகிறது


கடந்த காலத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தனது உயிரை பணையம் வைத்து அனைத்து மாவட்டங்களிலும் நேரில் சென்று நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டார்

மதுரை மாவட்டத்தில் முதல் அலையில் உச்சபட்சமாக 18 சதவீதமாக இருந்தது அதில் எடப்பாடிபழனிசாமி எடுத்த நடவடிக்கையால் 0.5 சகிதமாக குறைந்தது மேலும் இறப்பு சதவீதம் ஒரு சகவீதற்கு குறைவாக இருந்தது மேலும் மருந்துகள் ஆக்சிசன் ஆகிய தட்டுப்பாட்டால் யாரும் இறக்கவில்லை கடந்த காலத்தில் ஏற்பட்ட சவால்களை எல்லாம் முறியடித்து அதையெல்லாம் சாதனையாக்கினார்

தற்போது தமிழகத்தில் இரண்டாம் அலை அதிகரித்துள்ளது ஒரே நாளில்தமிழகத்தில் 30,000 மேற்பட்டோருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் படுக்கைகள், ஆக்ஸிஜன், மருத்துவ உபகரணங்கள் இவற்றையெல்லாம் வழங்க பெரும் சவாலாக இருக்கிறது இந்த சவால்களை எதிர்கொண்டு மக்கள் உயிரை அரசு காப்பாற்ற வேண்டும்

கால அவகாசங்கள் குறைவாக இருந்தாலும் போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும் ஆய்வுக்கூடங்களில் எடுக்கும் முடிவுகளை களத்தில் கடைக்கோடி கிராமங்கள் வரையில் செயல்படுகிறதா என்று அரசு கூர்ந்து கவனித்து மக்கள் உயிரை காப்பாற்ற வேண்டும்

தற்போது தமிழகத்தில் ஆம்புலன்சில் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டு வருவது வேதனை அளிக்கிறது ர்ர்அதேபோல் இறப்பு சதவீதம் மிகவும் அதிகரித்து வருகிறது தற்போது மதுரை மாவட்டத்தில் புதிதாக கோவிட் கேர் சென்டர் உருவாக்கப்பட்டுள்ளது இதற்கெல்லாம் தேவையான மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளார்களா என்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

அதேபோல் மக்களுக்கும் நான் வேண்டுகோள் வைக்கிறேன் மக்களும் அரசு விதிகளை கடைபிடித்து தேவை இருந்தால் மட்டுமே வெளியே வரவேண்டும் இந்த கோரோனா அரக்கன் நம்ம வீட்டு செல்லும் வரை நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

இந்த கொரோணாவை கடைசி வரை விரட்டி அடிக்கும் வகையில் இந்த கபசுர குடிநீரை கழக அம்மா பேரவை சார்பில் வழங்கப்படும் அதுமட்டுமல்லாது மதுரை மாவட்டத்திற்கு யாருக்காக தேவைபட்டால் வழங்கப்படும் என்று கூறினால் அவர்களுக்கு வழங்கப்படும்

அதனை தொடர்ந்து மூன்று தீர்மானங்களை நிறைவேற்றினர் அதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டும், கழக அம்மா பேரவை சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி கே பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்கி மக்களுக்கு சேவையாற்றும் என்றும், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தம்பி மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், முன்னாள் சேர்மன் தமிழழகன் ,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்