மதுரை அருகே தகராறில் இளைஞர் படுகொலை

மதுரை அருகே தகராறில் இளைஞர் படுகொலை
X
மதுரை நிலையூர் அருகே, ஜெ.ஜெ. நகரில் முன்விரோதம் காரணமாக, இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

மதுரை.மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே கைத்தறி நகரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் அருண் குமார் (22). இவர், முத்துபட்டியில் உள்ள டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் உள்ள, ஜெ.ஜெ. நகரில் பன்றி வளர்ப்பது தொடர்பாக வெங்கடேசன் மற்றும் சரவணன் குடும்பத்தாருக்கு இடையே, ஏற்கனவே முன்பகை இருந்து வந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக இரு குடும்பத்தாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில், வெங்கடேசன் குடும்பத்திற்கு ஆதரவாக, அருண்குமார் வந்துள்ளார். சரவணன் குடும்பத்தாருடன் சரவணனின் தந்தை நாகராஜ் (வயது 55,) முருகம்மாள் (வயது 48,) சரவணன் (வயது 32, )இரண்டாவது மகன் கார்த்திக் (வயது 30,) மூன்றாவது மகன் செல்வம் 26 ) உள்ளிட்ட 5 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில், சம்பந்தம் இல்லாத அருண்குமார் தலையிட்டதால் ஆத்திரமடைந்த சரவணன், மற்றும் குடும்பத்தார் ஐந்து பேரும் சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அருண் குமாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே அருண்குமார் இறந்தார்.

இதுகுறித்து, வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்ற சரக காவல் உதவி ஆணையர் சண்முகம், மற்றும் திருப்பரங்குன்ற காவல் ஆய்வாளர் சுந்தரி, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

பிறகு, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சரவணன் மற்றும் அவரது குடும்பத்தார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி