மதுரை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளைஞர் தின விழா

மதுரை புறநகர் மாவட்டத்தின் சார்பில் தாரை, தப்பட்டை கலைநிகழ்சியுடன் மதுரை ஊர்மெச்சிகுளம் மந்தை திடலில் இளைஞர் விழா நடைபெற்றது.
மதுரை புறநகர் மாவட்டத்தின் சார்பில் தாரை, தப்பட்டை கலைநிகழ்சியுடன் மதுரை ஊர்மெச்சிகுளம் மந்தை திடலில் இளைஞர் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மதுரை மாவட்டத்தில், விளையாட்டு மற்றும், கலை இலக்கிய போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள் மற்றும் கைப்பந்து போட்டியில் வென்றவர்கள், கபடி போட்டியில் வென்றவர்கள் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் ஆகியோருக்கு நினைவு பரிசினை வழங்கினார்.
இராண்டாம் உலக போரின் கடைசி குண்டு திரைப்பட இயக்குனர் அதியன் ஆதிரை பாராட்டினார் சு வெங்கடேசன்.
வன்னிவேலம்பட்டி தமிழன்னை கலை குழுவினரின் கோலாட்டம் கலை நிகழ்வுகள், கரிசல் கருணாநிதி மற்றும் காம்ரேட் டாக்கிஸ் குழுவினரின் பாடல்கள், விஜய் டிவி புகழ் ஆத்தங்குடி இளையராஜா குழுவினரின் கிராமிய பாடல்கள் நடைபெற்றது.
வேலு ஆசான் அவர்களின் பறை இசை முழக்கம் நிகழ்ச்சி, ஊர்மெச்சிகுளம் முத்துநாயகி அம்மன் சிலம்பாட்டக் கலைக் குழுவின் ஆட்டம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்விற்கு, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாநில செயலாளர் பாலா சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கார்த்தி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu